December 1, 2025
#தூத்துக்குடி

அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட தெற்கு மண்டலத்தில் தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெறவுள்ளது -மேயா் ஜெகன் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் 25.06.25 அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் செ.ஜெனிட்டா, துணை ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினாா்.  

மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்; தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு, இன்று தெற்கு மண்டலத்தில் நடைபெறுகிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம் புதிய குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு 95.5 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் 15 குறைதீர்க்கும் முகாம்களில் இதுவரை 563 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 463 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் நடைமுறை ஆய்வில் உள்ளது. தற்சமயம் மனுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த அளவிற்கு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு கண்டுள்ளோம். இந்த பகுதி ஊராட்சியாக இருந்து 2009ம் ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதி. இங்கு கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொண்டதால் தற்போது குடிநீர் 24 மணி நேரமும் இங்கு கிடைக்கிறது. சாலை பணிகள் முழுவதுமாக நடைபெற்றுள்ளது. சிறிய தெருக்களில் பேவர் ப்ளாக் சாலைகள் போடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சாலைப் பணிகளும் நிறைவடையும். 60 வார்டுகளிலும் சமச்சீராக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் புதிய மகளிர் பூங்காவிற்க்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதுபோல போதை நோயாளிகள் மறுவாழ்வு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  

திருச்செந்தூர் கோவில் செல்லும் பாதசாாி பக்தர்களுக்கு ஓய்விட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சாலையோர பூங்கா பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலைப் பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன.

பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை கால் சென்டர் நம்பர் மூலமும் நேரிலும் தெரிவிக்கலாம் மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் சரவணன், நகா்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், விஜயகுமாா், வைதேகி, பட்சிராஜ், ராஜேந்திரன், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச் செல்வன், திமுக வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயாின் உதவியாளர்கள் ரமேஷ், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.