ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவல்லிகோட்டை ஊராட்சி பரிவல்லிக்கோட்டை கிராமத்தில் வடக்கு தெருவில் 150 மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில் 6.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட் 63 KVA மின்மாற்றி மற்றும் தெற்கு தெருவில் 50 மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் 3 லட்சம் மதிப்பில் 25 KVA மின்மாற்றியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
முன்னதாக ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தென்னம்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.21 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியினையும், கோபாலபுரம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் பேவர் ப்ளாக் சாலை பணிகளையும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி பொறியாளர் பால்முனியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் துரைச்சாமி, முருகலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுடலைகண்ணு, செல்வராஜ், உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் ஊராட்சி செயலர்கள் கண்ணன், மனோகரன் திமுக கிளை செயலாளர்கள் பண்டாரம், சௌந்தரபாண்டியன், சிவக்குமார், சரவணன், கண்ணன், குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
.

