தூத்துக்குடி மண்டல திருஇருதய நண்பர்கள் இயக்கத்தின் அன்பு,சேவை,விடுதலை எனும் கிறிஸ்துவின் பண்புகளை நோக்கமாகக்கொண்ட ஒருநாள் கருத்தரங்கு அமர்வு தூத்துக்குடி மரியன்னைப் பள்ளி வளாக அரங்கில் நடை பெற்றது.
மரியன்னை கலைமனைகள் இல்லத்தலைவர் அருட் சகோ.ஆரோக்கியம் பீட்டர் முன்னிலை வகித்தார், அருட் சகோதரர்கள் துணைதலைவர் பெனடிக்ட் சபை, சபை நிதியாளர் அல்பர்ட் சேவியர் பங்கேற்றார்கள். பேரருட்பணி முன்னாள் முதன்மை குரு செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.முன்னதாக அருட்சகோ. சேசு ராஜ் ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.
பின்னர் குழு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அருட்சகோ. இராஜன் பதவி பிரமாணம் செய்துவைக்க உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். புதிய மண்டல பொறுப்பாளர்கள் இயக்குநர் வழிகாட்டுதலில் வாக்குச்சீட்டுமூலம்ஸதலைவராக பிரின்ஸ் கர்டோசா,செயலராக பாஸ்கர் சில்வா,பொருளாளராக ராஜ்குமார்,துணைத்தவைவராக ரோஸ்மேரி,இணைசெயலராக கிருபா,தேர்வு செய்யப்படடு, அனைவரின் வாழ்த்துக்களை பெற்றனர்.
நிறைவாக கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்பணி பெஞ்சமின் டி சூசா திருப்பலி நிறைவேற்றினார். நிகழ்ச்சிஏற்பாடுகளை தலைவர் பிரின்ஸ் கர்டோசா, செயலர் தங்கையா, பிரான்சிஸ், பாஸ்கர் செய்திருந்தனர். சகோ.ஷெல்டன் நிழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


