தூத்துக்குடி.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி அன்னை இந்திரா நகர் பகுதி இளைஞர் அணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா சாதனை விளக்க பொதுக்கூட்டம் எட்டையபுரம் ரோடு – ஹவுசிங் போர்டு சந்திப்பில் நடைபெற்றது. பகுதி இளைஞர் அணி செயலாளர் அலெக்ஸ் ராஜ் தலைமையில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜாபர் உசேன் க்ஷ, பால்கிங், சேயந்தையன், சதீஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.காளீஸ்வரன் வரவேற்புரையாற்றினார்.
இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்புரையாற்றி பேசுகையில்;
தலைவர் கலைஞர் 5 முறை முதலமைச்சராகவும் 13 முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழர் உரிமைக்கும் குரல் கொடுத்தார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி அமைப்பில் 33 சதவீதம் இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழு, என பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அதே வழியில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த குழந்தை முதல் மாணவ மாணவிகள், மகளிர், முதியோர் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் விடியல் பயணத்தில் ஒருவருக்கு மாதம் 1000 ரூபாய் சேமிப்பு ஏற்படுகிறது, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் ரூ.1000 மற்றும் நான் முதல்வன் திட்டம் என பல சாதனைகளை படைத்து வருகிறார். பள்ளி குழந்தைகளின் நலனுக்காக காலை உணவு திட்டம் இப்படி சாதனைகளை அடிக்கடி கொண்டே சொல்லலாம். தமிழ்நாட்டில் தான் தொழில் முதலீடு அதிகம் வருகிறது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் திட்டங்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சரின் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பல பணிகள் நடைபெறுவதற்கும் நடைபெற்று கொண்டிருப்பதற்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக நானும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உங்களுக்காக பணியாற்றுகிறேன். தி.மு.க ஆட்சியின் சாதனைகளை வீடு தோறும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஒரு பகுதியில் ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 800 வாக்கு தி.மு.கவிற்கு வரவேண்டும். அதற்கேற்றாற்போல் எல்லோரும் பணியாற்றுங்கள்.
முதல்வர் அறிவித்தபடி 200 தொகுதியல்ல 234 தொகுதியும் நாம் தான் வெற்றி பெற போகிறோம்.
இன்னும் 25 ஆண்டுகளுக்கு தி.மு.க தான் ஆட்சியில் இருக்கும். அனைவரும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என சண்முகையா எம்எல்ஏ பேசினார்.
தலைமைக் கழக பேச்சாளர் குழந்தை வேல், இளம் பேச்சாளர் செந்தூர் பாண்டி, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் பகுதி செயலாளர் சிவகுமார், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.எம்.ஸ்டாலின், பகுதி அவைத் தலைவர் கவுன்சிலர் ரெங்கசாமி, கவுன்சிலர் காந்தி மணி, மாவட்ட பிரதிநிதி தர்மராஜ்,
வட்ட செயலாளர்கள் ராஜன், கார்த்திகேயன், தெய்வேந்திரன், ராஜகுமார், வினோத், கிஷோர், பகுதி மாணவரணி அன்புமணி, மகளிர் அணி ரமணி, பௌஷியா,
மற்றும் அன்னை இந்திரா நகர் பகுதி கழக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவில் 3வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் ரெங்கராஜன் நன்றி கூறினார்.

