தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஆணையர் மதுபாலன் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வைத்தார். முகாமில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது;
“தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கிழக்கு மண்டலத்தில் இன்று 14வது முகாம் நடைபெற்றது. இதுவரை 2500 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளிலும் சாலை, குடிநீர், வடிகால் மற்றும் சுகாதார வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பகுதிகளில் புதிய ரோடுகள் போடுவதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது
சிந்தனையும் செயலும்
மக்களின் நலனுக்காக புதிதாக என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனையை சிந்தித்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பது தான்.. புதிதாக இரண்டு தினசரி சந்தை
தூத்துக்குடி தெப்பக்குளத்தை சீரமைத்து அதை சுற்றி பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தூத்துக்குடியில் பொதுமக்கள் வசதிக்காக மேற்கு மண்டலம் மில்லர்புரம், மற்றும் வடக்கு மண்டலம் அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே புதிதாக இரண்டு தினசரி சந்தை அமைக்கப் படஉள்ளது.
மாநகர பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டு வைத்து வளர்த்து வருகிறோம். பொது மக்கள் கேரி பேக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பக்கிள் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் கேரி பேக் மற்றும் குப்பைகள் போடப்பட்டு வருகிறது. இதை முழுமையாக தடுக்க கவுன்சிலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
முகாமில் கோரிக்கை மனு அளித்த 5 பேருக்கு உடனடியாக தீர்வாணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
முகாமில் துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் வெங்கட்ராமன், மாநகர துணை பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் சரோஜா, திட்ட பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், இர்வின்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், தனலட்சுமி, ஜான்சி ராணி, சரண்யா, ராமு அம்மாள், மகேஸ்வரி, மரிய கீதா, எடிண்டா, மும்தாஜ் மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ்குமார், சரவணன், பகுதி பிரதிநிதி பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயர் உதவியாளர்கள் ரமேஷ், ஜோஸ்பர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

