தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வஉசி கல்லூரி அருகில் ரூபாய் 52 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 490 சதுர மீட்டர் கொண்ட செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து கைப்பந்து, கிரிக்கெட் வலைப் பயிற்சி, இரண்டு இறகு பந்து மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மாநகராட்சி விளையாட்டு திடல் திறப்பு விழா 12.06.25 அன்று மாலை நடைபெற்றது.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோட்டாட்சியர் பிரபு, டவுன் ஏஎஸ்பி மதன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன், வெங்கட்ராமன், கல்யாண சுந்தரம், பொறியாளர் தமிழ்செல்வன், நகர்நல அலுவலர் சரோஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா கஸ்தூரி தங்கம், வழக்கறிஞர் அணி குபேர் இளம்பருதி, அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், கணகராஜ், சரவணக்குமார், ஜெயசீலி, பவானி மார்ஷல், விஜயகுமார், ஜான் சீனிவாசன், ரெக்ஸ்லின், விஜயலட்சுமி, சந்திரபோஸ், கந்தசாமி, கண்ணன், மற்றும் தொமுச நிர்வாகி பேச்சிமுத்து, பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

