December 1, 2025
#செய்தி

தூத்துக்குடி பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரும் மக்களை- அலுவலக அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்!

தூத்துக்குடி இன்று நெல்லையிலிருந்து ஒரு குடும்பத்தினர் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்காக தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்திற்கு சென்றிருந்தனர் அவர்கள் இருப்பிட சான்றுகள் எல்லாம் நெல்லையில் இருக்கிறது, இருந்தாலும் அவர்கள் பாஸ்போர்ட் வெப்சைட்டில் முன் அனுமதி வேண்டி பெரும்போது அவர்களுக்கு மதுரையின் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கீழ் வரும் அனைத்து மாவட்ட பாஸ்போர்ட் சேவை மையங்களில் முன் அனுமதி தேதி காட்டப்பட்டதால் அவர்கள் தங்களுக்கு எந்த மாவட்டத்தில் வசதியான தேதி வருகிறதோ அந்த மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை குறிப்பிட்டு முன் அனுமதி பெற்றுவிட்டனர்

.ஆனால் இன்று அவர்கள் தூத்துக்குடி தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றபோது அங்குள்ள அலுவலர்கள் நாங்கள் தூத்துக்குடி மாவட்ட பாஸ்போர்ட் கோரிக்கைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்றும், இதை நீங்கள் நெல்லை பாஸ்போர்ட் அலுவலகத்தை தான் அணுக வேண்டும் என்று கூறியுள்ளனர்

அப்படி நெல்லை மக்கள் நெல்லை பாஸ்போர்ட் அலுவலகத்தை மட்டுமே நாட வேண்டும் என்றால் ஏன் பாஸ்போர்ட் வெப்சைட்டில் அது மதுரை மண்டலத்தின் கீழ் வரும் அனைத்து பாஸ்போர்ட் அலுவலங்களையும் ஏன் காட்டுகிறது.? 

நெல்லை மாவட்ட மக்களுக்கு நெல்லையை மட்டும் அல்லவா காட்டியிருக்க வேண்டும்… ஆகையால் தூத்துக்குடியில் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து தகுந்த அறிவுரைகளையும், விதிமுறைகளையும் கூறி நன்கு பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் மக்களின்  நேரத்தை வீணாக்காமல்  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.