December 1, 2025
#செய்தி

வைகாசி விசாக பாதயாத்திரை பக்தர்கள் விபத்தின்றி பாதுகாப்பாக செல்ல தூத்துக்குடி காவல்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சிகப்பு ரிப்ளக்டர் ஸ்டிக்கர் பக்தர்கள் பாராட்டு!

தூத்துக்குடி ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது.

இதில் தமிழ் மாதம் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வருவார்கள். பல்வேறு வேண்டுதல்களில் மிக முக்கியமான ஒன்று பாதையாத்திரை.நாளை வைகாசி விசாகம் என்பதால் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரை மேற்கொண்டு வருகின்றனர் .

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இரவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நலனில் அக்கறை கொண்டு.

நடந்த செல்பவர் சட்டையின் பின்புறம் மற்றும் தோளில் சுமந்து செல்லும் பைகளின் மேல் சிகப்பு வண்ணம் கொண்ட ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டி விபத்து நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த உதவியை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர்.

மேலும் காவல்துறை சார்பாக இரவு நேரத்தில் நடந்து செல்லும் பாதயாத்திரை  பக்தர்கள் தங்களையும், தங்களின் உடமைகளை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.