December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிய மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி,மே.27;தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, மழைநீர் கால்வாய்கள், சாலைகள் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட ஒரு சில பகுதிகளில் வடிகால் மற்றும் சாலை பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. மேலும் பருவ மழைக்கு முன்பதாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி முன்னெடுப்பில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சாலையில் காமராஜர் கல்லூரி முன்பு இருந்து அன்னம்மாள் மகளிர் கல்லூரி வரை புதிய மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பமாக இருப்பதால் அந்த இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி 27.05.25 இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்ட செயலாளரும் பகுதி செயலாளர்களும் மாமன்ற உறுப்பினர்களுமான ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், 45 வது வட்ட செயலாளர் சுரேஷ் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.