December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் தேர்தல் குழுவின் கண்காணிப்பு ஆய்வு கூட்டம்

விளாத்திகுளம்,மே.27: விளாத்திகுளத்தில் அணுகத்தக்க தேர்தல் குழுவின் கண்காணிப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து அணுக தக்க தேர்தல் குழுவின் கண்காணிப்பு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில் விளாத்திகுளம் தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், மாற்றுத்திறனாளி அட்டை பெற்றவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது,வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்தல்,மாற்றுத்திறன் உடையவர்களுக்கான செயலி ஆகியவற்றை குறித்து விளக்கமளித்தாா்.

கூட்டத்தில் விளாத்திகுளம்,புதூர் பகுதியைச் சேர்ந்த சுகாதார மேற்பார்வையாளர்கள்,அக்லூட் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி நிர்வாகிகள்,தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் மலையாண்டி, எபிக் ஆபரேட்டர் பாரதிசெல்வன், உட்பட பலர் கலந்து கொண்டனர்,