December 1, 2025
#திருநெல்வேலி மாவட்டம்

கனமழை காரணமாக : திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாக துவங்கியது.துவங்கிய நாளில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் அளவு அதிகரித்து வருகிறது இதன் எதிரொலியாக ..

திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக் கோட்டம், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், துணை இயக்குநர், களக்காடு அவர்களின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025 மே 27 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இந்தக் தடை அமலில் இருக்கும் என திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் அனைத்துப் பத்திரிகை நண்பர்களுக்கும் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழைப்பொழிவு மற்றும் நீர்வரத்து அதிகரிப்பால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு அபாயங்களைத் தவிர்க்கும் பொருட்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வனத்துறையின் அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

.