தூத்துக்குடி கடந்த 23ம் ஆண்டு எதிா்பாராமல் பெய்த கன மழை பெரும் வெள்ளத்தால் மாவட்டம் முழுவதும் கடுமையான வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தால் ஏராளமானோரின் வீடுகள் சேதமடைந்தன.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 49வது வாா்டு ராஜபாண்டி நகா் எம்.ஜி.ஆர் நகா் சத்யா நகா், கருணாநிதி நகர் பகுதியில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்த 25 குடும்பத்தினருக்கு இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் வழங்கினார்.
நிதியுதவி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்
கடந்த காலங்களில் இரண்டு கட்டம் பெய்த கனமழையால் எதிர்பாரா வகையில் வரலாறு காணாத பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பினருக்கும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பல்வேறு வகையிலும் உதவிகளை செய்தாா். அது மட்டுமின்றி அனைவருக்கும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கினார். இதில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 49வது வாா்டு பகுதியில் முழுமையாக வீடுகளை இழந்தவா்களுக்கு கடந்த 18.05.25 அன்று 10 குடும்பத்தினருக்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளை வழங்கினோம்.
அதே போன்று தற்போது வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த நிதி உங்களுக்கு வழங்கப்படுகிறது.
உங்கள் பகுதியை பொறுத்தவரை இரயில்வே மற்றும் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் பணிகளை செய்ய வேண்டியுள்ளது.
பெரும் மழைகாலத்தில் எல்லா தரப்பினருக்கும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் உதவிகளை செய்தோம் என்பதையும் நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் உங்களுக்கான பணிகளை எப்போதும் முதலமைச்சர் வழியில் நாங்கள் செய்து கொடுப்போம். இந்த நல்ல நிகழ்ச்சிக்கு எங்களுக்கு துணையாக இருக்கின்ற நிறுவனங்களையும் பாராட்ட கடமைபட்டுள்ளோம். பொதுமக்களும் வரும் காலத்தில் திமுகவிற்கு துணை நிற்க வேண்டும் என பேசினார்.
வீடுகள் கட்ட சொந்த பணத்தை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்
நிகழ்ச்சியில் எஸ்.இ.பி.சி பவா் பிரைேவட் லிமிடெட் சாா்பில் ரூ.25 ஆயிரம் வீதம் 15 பேருக்கு காசோலையும் அதே 15 பேருக்கு அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த பணத்தில் ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கியது மட்டுமின்றி மேலும் 10 நபா்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த பணத்தை வீடு இழந்த மக்களுக்கு வழங்கினார்.
வீடுகட்ட நிதியுதவி பெற்ற முதிய தம்பதியினர் அமைச்சர் கீதாஜீவனுக்கு நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தி, உங்களது தந்தையார் வழியில் எல்லோருக்கும் உதவி செய்து அரவணைத்து செல்லும் குணம் மகத்தானது. வீடு கட்ட உதவிகளை செய்த அமைச்சர் கீதாஜீவன் நல்லா இருக்கனும் என்று மனதார வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், எஸ்இபிசி பவார் பிரைவேட் லிமிடெட் நிா்வாகத் தலைவர் நரேந்திரா, எஸ்இபிசி ஹெச்ஆர் அலுவலர் முருகேசன்,
மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ஏஞ்சலா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் பிரபு, நாகராஜன்,
மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமாா், பொறியாளர் அணி தலைவர் பழனி,
மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தா், துணை அமைப்பாளர் ஐ.ரவி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் வைதேகி, வட்ட அவைத் தலைவர் பொியசாமி. வட்டப் பிரதிநிதிகள் சுடலை மணி, பாஸ்கா், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனிஸ்வரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமாா், 49 வது வார்டு நிர்வாகிகள் முத்துக்குமாா், இளம் பேச்சாளா் முத்துராஜா, பகுதி இளஞைர் அணி அமைப்பாளர் சூா்யா, மற்றும் மணி அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
.

