December 1, 2025
#தூத்துக்குடி

புதிய விளையாட்டு மைதானம், தெப்பக்குளம் படகு சவாரி விரைவில் மக்கள் பயன்படுத்தலாம் – மேயர் ஜெகன்

தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு

மண்டலத்தில் இன்று 21.05.25 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், இணை ஆணையர் சரவணக்குமாா், துணை மேயர் ஜெனிட்டா, முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார் முகாமில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 11 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இங்கு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. பெயர், முகவாி மாற்றம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

இந்த மண்டலத்தில் 611 மனுக்கள் பெறப்பட்டதில் 592 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது 19 மனுக்கள் மட்டும் ஆய்வில் உள்ளது. கிழக்கு மண்டலம் மாநகராட்சியின் பழைய பகுதி நூறு வருடத்திற்கு முன்பு உள்ள பகுதி இதுதான் வார்டு 23. முதல் 28 வரை பழைய நகராட்சியின் வார்டுகள் குறுகிய சந்துகள், சாலைகள் எல்லாம் பேவர் பிளாக் சாலைகள் போடப்பட்டுள்ளது. 1500 புதியதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. முத்து நகர் கடற்கரை பூங்காவிற்கு சனி ஞாயிற்று கிழமைகளில் 2000 பேர் வருகை தருகிறார்கள். தற்போது கோடை கால விடுமுறை என்பதால் தினசரி 2000 பேர் வருகிறார்கள். பூங்காவில் ஓய்வு அறை வேண்டும் என கேட்டனர் அது அமைக்கப்பட்டு வருகிறது. ரோச் பூங்கா நல்ல முறையில் மீண்டும் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்து வருங்காலங்களில் பல்வேறு வசதிகளுடன் அங்கு அமைக்கப்பட உள்ளது.

நடப்போம் நலம் பெறுவோம் ஹெல்த் வாக் சாலை

பீச் ரோட்டில் ஒரு புறம் தான் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது தற்போது அதன் எதிர் புறத்தில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. மேலும் விவிடி சிக்னல் முதல் பழைய துறைமுகம் வரை ரோட்டின் இருபுறமும் அழகுபடுத்தும் வகையில் பேவர் பிளாக் நடைபாதை கல் பதிக்கப்பட்டு வருகிறது. அதுபோல சிஎஸ்ஐ சர்ச் எதிரேயுள்ள இடத்தில் பெரியவர்கள், குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வசதியாக அங்கே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வஉசி கல்லூரி அருகில் புதியதாக விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு இன்னும் பத்து நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தலாம். சண்முகபுரம் பகுதியில் புழு கலர் பைப் லைன் பதிக்கப்பட்டு வருகிறது குளோரின் அளவு சரியான அளவில் சேர்க்கப்பட்டு சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தெப்பக்குளம் சீரமைத்து விரைவில் படகு சவாரி

நீண்ட நாள் கோரிக்கையான தெப்பக்குளம் சீரமைப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. குளத்தில் உள்ள நீரை அப்புறப்படுத்தப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் குழந்தைகள் கண்டு களிக்கும் வகையில் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது.தெப்பக்குளத்தில் படகு வசதியும் மக்களின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட உள்ளது என மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு
மண்டலம்

நிகழ்ச்சியில், உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், நகா்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள். இளநிலை பொறியாளர்கள், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா் எம்.சி, மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி, ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், மகேஸ்வாி, ரெக்ஸ்லின், மாியகீதா, மும்தாஜ், ரிக்டா, வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினா் ஆர்தா் மச்சாது, மேயர் உதவியாளர்கள் ரமேஷ், ஜோஸ்பர் உள்பட பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.