December 1, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு பெருவிழா பூமிபூஜை, பணிகள் தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு யாகசாலை பந்தக்கால் நாட்டும் விழா பூமி பூஜையுடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகின்ற ஜீலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அவ்விழாவிற்கான யாகசாலை பந்தக்கால் நாட்டுதல் மற்றும் பூமி பூஜை செய்தல் நிகழ்ச்சி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில் (18.05.25) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.அருள் முருகன், திருச்செந்தூர் நகர் மன்றத் தலைவர் சிவ ஆனந்தி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் திருஞானசேகரன், இணை ஆணையர் (இந்து சமயம்) அன்புமணி, திருச்செந்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், திருசெந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், தூத்துக்குடி சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் மா.சுதாகர், மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.