December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நேற்று  14ந்தேதி ஜமாபந்தி முகாம் தொடங்கியது. முதல் நாளில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகள் வைக்கப்பட்ட 49 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 9 மனுக்கள் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இதில் அனைத்தும் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு தகுதியான 3 பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம் எடுப்பு பிரிவு) சங்கரலிங்கம் வழங்கினார்.

இந்நிகழ்வில் சிப்காட் தாசில்தார் சந்திரன் விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன்,துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட விஏஓ மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.