December 1, 2025
#தூத்துக்குடி

செவிலியர் தின விழாவில் செவிலியர்களுக்கு விருது வழங்கிய கனிமொழி எம்பி,. அமைச்சர், மேயர் பங்கேற்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் உலக செவிலியர் தின விழா மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில், குத்து விளக்கு ஏற்றி, மருத்துவ துறையில் 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

49.00 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி சார்பில் உள் நோயாளிகளை பராமரிப்பாளர்கள் தங்குமிடம்

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உள்புற நோயாளிகளை உடனிருந்து பராமரித்துக் கொள்ளும் நபர்கள் தங்குவதற்காக ரூபாய் 49.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் திறந்து வைத்தார்.

விழாவில், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டல தலைவர் அன்னலட்சுமி,

செவிலியர் கண்காணிப்பாளர் சாந்த குமாரி, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஞானசிரோமனி ஹெலன் இந்திராணி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க செயலாளர் உமா மகேஸ்வரி, இணை செயலாளர் சீ.செல்வம், மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்கள் குமரன், பத்மநாதன், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் துணை மேயர் செ.ஜெனிட்டா, கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ஜெயசீலி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, அரசு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி போதகர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செவிலியர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.