தூத்துக்குடி வஉசி கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசுகையில்;
நான் எப்போதும் இந்த கல்லூரி நிர்வாகி வீரபாகுவை நான் சார் என்று ஒரு நாளும் கூப்பிட்டது கிடையாது அண்ணன் என்று தான் கூப்பிடுவேன் இங்கு வந்துள்ள சூப்பர் சிங்கர் பாலாவை நான் பாராட்டுகிறேன் ,இங்கு கல்லூரியில் உள்ள ஆசிரிய பெருமக்கள் பணியாளர் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் கல்லூரி நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல அதனை 75 ஆண்டு காலமாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின் பெயரை குறிக்கும் வகையில் உள்ள இந்த கல்லூரிக்கு என்று தனி பெருமை உண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நிறைய பேர் இருந்தாலும் அவருடைய பெயரில் வீரபாகு கல்லூரி ஆரம்பித்தது அந்த காலகட்டத்தில் மிகவும் சிரமமானதாகும். மாவட்டம் நல்ல முறையில் முன்னேறி உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் கொள்கைப்படி ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது அவசியமானதாகும், நல்லமுறையில் கல்வியை கற்றுக்கொண்டால் தான் எதிர்காலத்தில் நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்.
அதன்மூலம் தான் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் நல்ல பழக்க வழக்கங்கள் குடும்பங்கள் சிறப்பாக அமையும். இன்று 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த கல்லூரி அடுத்து 100வது ஆண்டு 125வது ஆண்டு 150 ஆண்டு என்று கொண்டாட வேண்டும் இசையை பொருத்தவரை இசை என்பது இன்பம் துன்பம் இரண்டுக்கும் இசையை நாம் ரசிக்கிறோம் மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்னிசை என்பது எல்லோருக்கும் தேவைப்படும் ஒன்றாகும் இந்த இசையை ரசிக்க வந்திருக்கும் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
விழாவில் கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், கல்லூரி முதல்வர் வீரபாகு, மாநகராட்சி சுகாதாரகுழு தலைவர் சுரேஷ்குமார், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் சந்திரபோஸ். வட்டச்செயலாளர் ரவீந்திரன். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், சூப்பர் சிங்கர் பாலா, ஆர்யா பிரியா புருஷோத்தமன் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் முன்னாள் மாணவ மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

