விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழாவில் சுவாமி அம்பாள் அபிஷேகம் வாலி நாயகர் வஸ்திர தேவர் திருவீதி உலா சுவாமி அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும்,2,3,4 ஆகிய நாட்களில் பூங்குயில் சப்பரங்களில் சுவாமி அம்பாள் எழுந்து அருளால் அபிஷேகம் நிகழ்ச்சியும்,5ஆம் நாள் சுவாமி அம்பாள் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அருளிய நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேகங்களும்,6ஆம் நாள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் கழுகு ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது,7ஆம் நாளில் ஆனந்த தாண்டவமூர்த்தி சுவாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம் நிகழ்ச்சியும், நடராஜருக்கு வெள்ளை சாத்தி எழுந்தருளல் நிகழ்ச்சியும்,8ஆம் நாளில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம் அம்பாள் பூப்பல்லாக்கில் எழுந்தருளால் நிகழ்ச்சியும்,9ஆம் நாளில் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
10 ஆம் நாள் திருவிழா
திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் கிழக்கு வாசலில் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் கீழரத வீதி, மார்க்கெட்,மதுரை சாலை வழியாக வந்து மாலை 6.29 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
12-ம் தேதி (திங்கட்கிழமை) 11,ஆம் நாள் அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நிகழ்ச்சியும் பூ பல்லாக்கில் எழுந்தவர்களால் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 13-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி அம்பாள் பொன்னூஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும் நடைபெற உளளது.

