இந்தியா; போர்க்கால ஒத்திகைக்கு இந்தியா முழுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 244 மாவட்டங்களில், தமிழ்நாட்டில் 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
காஷ்மீர் பஹல்காம் தாகுதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக இரு நாடுகளும் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், எல்லை கிராமங்களில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் (7ஆம் தேதி) நாடு முழுக்க உள்ள 244 மாவட்டங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது
இந்த பாதுகாப்பு ஒத்திகையின் மூலம், போர் அல்லது அவசர காலத்தில் மக்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது கற்றுக்கொடுக்கப்படும். பெரும் பதட்டமான சூழலில், பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம், உடனடியாக போர் வரும் என்று பொருள் அல்ல. இது குடிமைப் பாதுகாப்பு விதி 1968-ன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை மட்டுமே.
வான் வழி தாக்குதல், போர், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட நேரங்களில் மக்களும், அரசு நிர்வாகமும் எப்படி அதனை எதிர்கொள்கிறது என்பதை அறிவதற்காக நடத்தப்படும் ஒத்திகை மக்களின் பயத்தை குறைப்பது, குழப்பங்களை தவிர்ப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை குறைப்பது உள்ளிட்டவற்றை அடிப்படை நோக்கமாக கொண்டதே தத்ரூபமான போர் ஒத்திகை.
மேலும் 7ஆம் தேதி) நடைபெறும் போர் ஒத்திகையின்போது, தற்காலிக மின் தடை, செல்போன் சிக்னல்கள் நிறுத்தம், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவற்றை மக்கள் எதிர்கொள்ள நேரிடும். சில இடங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து போர் கால அவசர சூழலை ஏற்படுத்தி மக்களை அதில் இருந்து வெளியேற்றுவது எப்படி என்பதை தத்ரூபமாக செய்வார்கள்.
இதற்காக இந்தியா முழுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 244 மாவட்டங்களில், தமிழ்நாட்டில் நான்கு இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் கல்பாக்கம், சென்னை துறைமுகம் ஆகிய 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் கடைசியாக கடந்த 1971ஆம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்களிலும், இந்தப் போர்க்கால ஒத்திகை (மே 7ஆம் தேதி) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

