December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்

By, CN அண்ணாதுரை 

  • தமிழகத்தில் கோடை காலம் துவங்கி  உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரியை தாண்டி உள்ளது

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் அக்னி நட்சத்திரமும் ஆரம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னெடுப்பில் கோடைகாலத்தில் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைத்தும், போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் உட்பட 12 இடங்களில் கோடை காலத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் பயணிகள், பொதுமக்களுக்கு உப்புகரைசல் நீர் வழங்கப்பட்டு வருகிறது. பறவைகளுக்கும் தண்ணீர் மாநகராட்சி சார்பில் வைக்கப்படுகிறது.

தற்போது கடும் கோடை காலத்திலும் மாநகராட்சி 60 வார்டுக்குட்பட்ட பகுதிகளிலும் குடி தண்ணீர் விநியோகத்தை சீரான முறையில் மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. பல பகுதிகளில் 24 மணி நேரமும் குடிதண்ணீர் தடையின்றி வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தூத்துக்குடி மக்கள் கோடை வெயிலை சுலபமாக சாமாளித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மக்களின் குடிநீர் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றார்.

மக்களுக்கு தடையில்லா குடிநீர் விநியோகம் – மேயர் ஜெகன்

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள ராஜாஜி பூங்கா, கலைஞர் பூங்கா, வி.வி.டி பூங்கா, குரூஸ் புரம், உள்ளிட்ட இடங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை 03.05.25 இன்று நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, இந்த நீர்தேக்க தொட்டிகளுக்கு வல்லநாடு நீரேற்று நிலையத்திலிருந்து வருகின்ற நீரின் அளவையும், மாநகர மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவையும் ஆய்வு செய்தார்.

மேயர் ஜெகன் ஆய்வு

இந்த ஆய்வின் போது மாநகர திமுக துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கனகராஜ், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சி.என்.ரவீந்திரன், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர திமுக மீனவரணி அமைப்பாளர் டேனியல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்