November 28, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

கலைஞர் கனவு இல்லம்” திட்ட உத்தரவினை 90 பயனாளிகளுக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ, வழங்கினார்

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டம் வேலைக்கான உத்தரவினை 90 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி
மார்கண்டேயன் வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த 90- பயனாளிகளுக்கு “கலைஞரின் கனவு இல்ல” திட்ட வேலை உத்தரவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், ஜி.வி.மார்கண்டேயன் வழங்கினார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கச்சாமி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மாரிச்செல்வம் உட்பட பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.