தூத்துக்குடியில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் திறப்பு விழா தூத்துக்குடி கடற்கரைச் சாலை தூய பனிமய மாதா பேராலயம் அருகே 02.05.25 அன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் சங்கத் தலைவர் தலைவர் ஆரோக்கியராஜ் சங்கக் கட்டடத்தை திறந்து வைத்தார். அலங்கரிக்கப்பட்ட பாண்டியபதி மன்னர் தேர்மாறன், சென்னை சிற்பி சிங்கார வேலர், குரூஸ்பர் னாந்து உள்ளிட்ட பரதவர் குல தலைவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மன்னர் தேர் மாறனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் – காளியம்மாள்
நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளர் காளியம்மாள் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்று குத்துவி ளக்கேற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நெய்தல் நிலத்தின் தொல்குடிகளான மீனவர்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்கிறோம் என்று அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகள் அளித்தாலும், இதுவரை நிறைவேற்றவில்லை. அரசு எங்கள் மக்களை பரதவர் என அரசாணை வெளியிட்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் தூத்துக்குடியில் பாண்டியாபதி மன்னர் தேர் மாறனுக்கு அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்து தர வேண்டும். கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை மீட்பு. நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என போராடி வரும் நிலையில் , கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு அனு மதித்துள்ளதை ஏற்கமுடியாது. கடலோர மக்களின் பாதிப்பை உணராமல் இத்திட்டத்தை அனுமதிப்பது சரியல்ல.
சேது சமுத்திரத் திட்டம் எப்படி தோல்வியில் முடிந்ததோ, அதேபோன்று ஹைட்ரோ கார்பன் திட்டமும் தோல்வியில் தான் முடியும் என தெரிவித்தார்.
விழாவில் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்தந்தை சர்ச்சில், வடக்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா, தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், வழக்குரைஞர் பிரைட்டர், பாத்திமா நகர் பங்கு தந்தை தந்தை ஜேசுதாஸ், கடல்சார் மக்கள் நலச் பொதுச் செயலாளர் சின்னத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பாண்டியபதி மன்னர் தேர்மாறன் நினைவிடத்தில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள், மன்னர் தேர்மாறன் மீட்புக்குழு, அனைத்து பரத குல ஊர்நலக் கமிட்டியினர் இணைந்து மன்னர் தேர்மாறன் கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சங்க பொதுச் செயலாளர் இன்னாசி, பொருளாளர் பெல்லார்மின், ஒருங்கிணைப்பாளர் ஜேஎம்ஜே அந்தோணிசாமி, பரதவர் நல சங்கத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் பர்னாந்து, முன்னாள் துணை மேயர் சேவியர், அகஸ்டின், முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்க நிர்வாகிகள் கனகராஜ், ஜான்சன், நாம் தமிழர் சகாயம், உள்பட அனைத்து ஊர் பரதவ நல கமிட்டியினர், தேர்மாறன் மீட்பு குழு நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

