தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து நடத்திய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலை வகித்தார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா பங்கேற்றனர்.
முன்னதாக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக 30 பயனாளிகளுக்கு 1 கோடி 5 இலட்சம் ரூபாய் மதிப்பில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 30 பயனாளிகளுக்கு 30 இலட்சம் 54,000 ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திருவைகுண்டம் அரசு மருத்துவமனை 24 இலட்சம் ரூபாய் மதிப்பில் QSCREEN MACHINE OAE – ABR கருவி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக விபத்து மரணத் தொகை 1 இலட்சம் ரூபாய் ஒரு பயனாளிக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, திருச்செந்தூர் நகர மன்ற தலைவர் சிவா ஆனந்தி, காயல்பட்டினம் நகர மன்ற தலைவர் முத்து முகமது, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் யாழினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
