December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கேக் வெட்டி, ஆதரவற்ற இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

   By CN. அண்ணாதுரை

தூத்துக்குடி,திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி மாநகர திமுக சார்ப்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்கள், பஸ் பயணிகள், ஓட்டுநர்களுக்கு திமுகவினர் வழங்கினர். தொடர்ந்து முதலமைச்சர் பிறந்தநாள் உறுதிமொழியை பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா வாசிக்க, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் திமுக நிர்வாகிகள், பிறந்தநாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர அவைத்தலைவா் ஏசுதாஸ், துணைச்செயலாளா் கீதா முருகேசன், கனகராஜ், மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ஐ.ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் பிக்அப் தனபால், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பெல்லா, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், வட்டச் செயலாளா்கள் பாலகுருசாமி, பாலு, கங்காராஜேஷ், கதிரேசன், முனியசாமி, சுப்பையா, டென்சிங், கருப்பசாமி, பொன்ராஜ், மூக்கையா, செந்தில்குமாா், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், வைதேகி, நாகேஸ்வாி, விஜயகுமாா், அந்தோணி மார்ஸ்லின், பகுதி பிரதிநிதிகள் சுகன்யா செந்தில், சில்வெர்ஸ்டர் வட்டப் பிரதிநிதிகள் புஷ்பராஜ், பாஸ்கா், பெரியசாமி, செந்தூர்பாண்டி, மற்றும் செய்யது காசிம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னர் தேவர்புரம் ரோடு ஆறுமுகசாமி அன்பு ஆசிரமம், பிரையண்ட் நகர் 3வது தெரு செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி, நேசக்கரங்கள் சிறுவர்கள் ஆதரவற்றோர் இல்லம், சிதம்பர நகர் 4 தெரு பிளசிங் முதியோர் இல்லம், பி &டி காலனி 12வது தெரு, பால்பாண்டி நகர் நியூ நேச கரங்கள் முதியோர் இல்லம், பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் நலத்திட்டங்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில், திமுக நிர்வாகிகள் வழங்கினர்.