December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

பட்டியலின மக்களின் பாதுகாப்பு கோரி புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

பட்டியலின மக்களின் பாதுகாப்பு கோரி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும். புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் எட்டயபுரம் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லெனின் தலைமை வகித்தார், கூட்டத்திற்கு கோவில்பட்டி நகர துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், கயாத்தார் ஒன்றிய பொறுப்பாளர் சண்முகநாதன் மற்றும் புதூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அஜித்குமார், எட்டயபுரம் நகரச்செயலாளர் செல்வக்குமார், கோவில்பட்டி ஒன்றிய மகளிரணி செயலாளர் கனிமொழி, எட்டயபுரம் நகர மகளிரணி செயலாளர் பாரதிராணி, காயத்தார் ஒன்றிய மகளிரணி செயலாளர் கிருஷ்ணவேனி, கோவில்பட்டி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜெயக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென்மாவட்டங்களில் தொடர்ந்து பட்டியலின இளைஞர்களின் படுகொலையை கண்டித்தும், பட்டியலின மக்களின் பாதுகாப்பு கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வருகிற 26.02.2025 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறுவதால் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் சார்பில் சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.