December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் மலையாண்டி முன்னிலை வகித்தார்.

முழு புலம் பட்டா மாறுதல் செய்யும் அதிகாரத்தை தனிமை இடத்து துணை வட்டாட்சியருக்கு வழங்கியது ரத்து செய்ய வேண்டும், இ.பி.எம்.எஸ் மின்னணு பதவி உயர்வு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கால அவகாசம் வழங்கி மென்பொருள்களில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்,விதிப்படி வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட பொருளாளர் ராஜ்,வட்ட செயலாளர் மாடசாமி உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

.