தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, நாகலாபுரம் சாமி அய்யா நாடார் பள்ளியின் 65 ஆவது ஆண்டு விழா மற்றும் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நாடார் உறவின்முறை தலைவர் காசிராஜன் மற்றும் பள்ளியின் தலைவர் தங்கமணி தலைமையில் நடந்தது.விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா மற்றும் மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலர் பிரபாகரன் கலந்து கொண்டு 2023 -24 கல்வியாண்டில் 10, 11, 12 -ம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பில் தத்தம் பாடங்களில் 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் சுப்புலட்சுமி, ஆறுமுகச்சாமி, மணிகண்ட ராஜா, கௌதமன், உமா மகேஸ்வரி, சாந்தி, மகேஸ்வரி, ஞான சேகர் இன்பராஜ், குணசேகரன் ஆகியோருக்கும். 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியைகள் அன்பு, ஜெயலட்சுமி, வாசுகி ஆகியோருக்கும் “சாதனை ஆசிரியர் ” விருதுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர்..விழாவில், தமிழ்ப் பாடத்தில் முதலிரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், அரசியல் அறிவியல், புவியியல் பாடங்களில் சிறப்பிடம் பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. மாவட்ட அளவில் சிலம்பம், கேரம் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கும், 12-வது வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் அதிகமதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கும் வரலாற்றுப் பாடத்தில் 100 % எடுத்த மாணவி மாரிஸ்வரிக்கும்சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட ஆறு மாணவியரில் ஒருவரான சுபித்ராவுக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரத்யேக பயிற்சி அளித்த தேசிய மாணவர் படை ஆசிரியர் ஜான் ஸ்டேனிக்கு நிர்வாகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, பள்ளி அளவில் நடைபெற்ற விளையாட்டுகளில்வென்ற 60 மாணவ, மாணவியருக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இறுதியாக மாணவ, மாணவியரின் கலைவிழா மேனாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும், சென்னை உறவின்முறைத் தலைவர் திராவிடமணி, செயலர் ஆகியோர் “ராஜாமணி அம்மாள் நினைவுப் பரிசுகளை வழங்கினர். பள்ளி நிர்வாகக்செயலர் பேராசிரியர் பால்பாண்டியன் வழிகாட்டுதலோடு,தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, ஆசிரியர்கள் மணிகண்ட ராஜா, கௌதம் ரமேஷ், கவிதா அலுவலர்கள் ராஜாராம், கணேசன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக தமிழாசிரியை உமா மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். இயற்பியல் ஆசிரியர் ஆறுமுகச்சாமி நன்றி கூறினார். பள்ளி நிர்வாகக் குழு மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் மாரி கண்ணபிரான், சிவசக்திவேல் கோடீஸ்வரன்,செல்ல மாரியப்பன், தமிழ்க் காவலன், ரத்னவேல் பாண்டியன், நாகலாபுரம் படிப்பக நிர்வாகிகள் ராஜா, கந்தசாமி, பச்சமுத்து அய்யனார். நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சிக்குழு நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சேகர் கலந்து கொண்டனர்.