ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியை நினைவு கூறும் விதமாக சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மௌன அஞ்சலி மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.
இதன்படி விளாத்திகுளம் அரசு கிளை நூலகத்தில் நூலகர் சுமத்ரா தலைமையில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் நூலக வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
.