தூத்துக்குடி,இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பாண்டியபதி (என்ற) தேர்மாறன் அவர்களின் 217 வது ஆண்டு குருபூஜை விழா 21-01-2025 அன்று காலை தூத்துக்குடி லசால் பள்ளி வளாகத்தில் உள்ள மன்னர் நினைவிடத்தில் நடைபெற்றது.
பாண்டியபதி 16ம் மன்னர் தேர்மாறன் 217 வது குருபூஜை.
மன்னர் தேர்மாறன் மீட்பு குழுவினர் மற்றும் அனைத்து ஊர் பரத குல நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி பரதகுல பிரமுகர்களும். மக்களும் கலந்து கொண்டு மன்னர் தேர்மாறன் கல்லறைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
நிகழ்ச்சியில் தேர்மாறன் மீட்பு குழு நிர்வாகிகள் அந்தோணிசாமி, இன்னாசி, பெல்லா, விஜயகுமார், முக்கிய பிரமுகர்கள் துணை மேயர் செ.ஜெனிட்டா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர், வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர், மாநில தலைவர் ராஜசேகர் பர்னாந்து, பாரம்பரிய தேசிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி ஆகியோர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேசத்தின் திறவுகோல் தேர்மாறன் பாடல் சிடி வெளியீட்டு விழா
தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பீச் ரோடு பெல் ஹோட்டலில் வைத்து பாண்டியபதி 16ம் மன்னர் தேர்மாறன்புகழ் பரப்பும் “தேசத்தின் திறவுகோல் தேர்மாறன்” பாடல் அடங்கிய குறுந்தகடு சிடி வெளியீட்டு விழா நடைபெற்றது. மன்னர் தேர்மாறன் மீட்புக்குழு செயலாளர் இன்னாசி வரவேற்புரையாற்றினார், “தேசத்தின் திறவுகோல் தேர்மாறன்” பாடல் சிடியை தேர்மாறன் மீட்பு குழு தலைவர் ஆரோக்கியராஜ் வெளியிட, பரதர் நலச் சங்கம் முன்னாள் தலைவர் பீட்டர் பெர்னான்டோ, மன்னரின் உறவினர் ஃபிரடி, வழக்கறிஞர் பிரைட்டர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மன்னர் தேர்மாறன் மீட்புக்குழு பொருளாளர் பெல்லா, அந்தோணிசாமி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அருட்தந்தை ஜேசுதாஸ் பர்னாந்து, பாண்டியபதி மன்னர் தேர்மாறனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். அருட்தந்தை சுரேஷ் தலைமை உரையாற்றினார். பாரம்பரிய தேசிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர் சிறப்புரையாற்றினார், இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் பவானி மார்ஷல், முன்னாள் கவுன்சிலர்கள் ஏடிஎஸ்.அருஸ், அகஸ்டின், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர், மாநில தலைவர் ராஜசேகர் பர்னாந்து, மாவட்ட பிரதிநிதி சங்கரசுப்பு, முத்துக்குளி சங்க பொதுச் செயலாளர் கனகராஜ், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் பிரான்சிஸ், பாரம்பரிய மீனவர் மகளிர் கூட்டமைப்பு அபர்ணா, பரதகுல பேச்சாளர் பிரான்சிஸ், மற்றும் அமலிநகர், சேர்ந்தமங்களம், முக்காணி, அதிசயபுரம், கூட்டப்பனை ஊர் நல கமிட்டியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மன்னர் தேர்மாறன் மீட்புக் குழுவினர் அனைத்து பரதகுல ஊர்நல கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
.