தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது மார்பளவு சிலைக்கும், காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அவரது முழு உருவ சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்விற்கு முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்திராமச்சந்திரன் தலைமை வகித்து எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ என்.கே. பெருமாள்,ஒன்றிய செயலாளர்கள் மேற்கு மகேஷ்,கிழக்கு பால்ராஜ்,வடக்கு மாவட்ட அம்மா பேரவை வரதராஜபெருமாள்,தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ஆனந்த்,மகளிரணி சாந்தி,சண்முகத்தாய்,ஆறுமுகத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

