விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் வீச் சேர் மற்றும் ஸ்ட்ரக்சர்கள் பழுதடைந்து பயன்படுத்தும் முடியாத நிலையில் இருந்து வந்தது.இதனால் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் முதியோர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அழைத்துச் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் விளாத்திகுளம் அறம் செய்ய அறக்கட்டளை முயற்சியால் ரூ 30 ஆயிரம் மதிப்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 2 வீல் சேர்கள் மற்றும் 1 ஸ்ட்ரக்சர் வழங்கும் விழா விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வைத்து நடைபெற்றது.
இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீல்சேர்கள், ஸ்ட்ரக்சரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,செவிலியர்கள் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார். அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்வில் கவின் போஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் செந்தில்குமார்,அறம் செய் அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டிகள் பாரதிசங்கர்,மாரியப்பன்,சுரேஷ்குமார்,விளாத்திகுளம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகிலா,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ்,சமூக ஆர்வலர் மாரியப்பன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல்,சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன்,வார்டு உறுப்பினர் சுப்புராஜ் மற்றும் அறம் செய் கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

