தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை பொதுமக்களிடம் துணை மேயர் ஜெனிட்டா பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.
இதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் துணை மேயர் செ.ஜெனிட்டா தலைமையில், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை துணை மேயர் பெற்றுக் கொண்டார்.
இந்த முகாமில்,கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை துணை மேயரிடம் வழங்கினார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் அண்ணா பேருந்து நிலையத்தில் விதிமுறைகளை மீறயதாக சீல் வைக்கப்பட்ட கடைகளின் உாிமையாளா்கள் வீதிமுறைகளை இனி மீறாத வகையில் கடைகளில் வியாபாரம் செய்வோம் என உறுதிமொழி பத்திரம் வழங்கி அபதார தொகை கட்டுவதாக உறுதியளித்து மனு வழங்கினார்கள். மேலும் 48 வது வார்டு தாமஸ் நகர் பெண்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
முகாமில் மாமன்ற உறுப்பினர்கள் மாியகீதா, ரெக்ஸின், தனலட்சுமி, மும்தாஜ், ராமுஅம்மாள், திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்ப் பொறியாளர்கள் ராமசந்திரன், இர்வின் ஜெபராஜ், நகர்நல அலுவலர் சூர்யபிரகாஷ், இளநிலை பொறியாளர் பாண்டி, திமுக வட்ட செயலாளர் கதிரேசன், வணிகா்கள் சங்க தலைவர் ஜவஹர், செயலாளர் தெர்மல்ராஜா, அண்ணா பேருந்துநிலைய வியாபாாிகள் சங்க தலைவர் அன்னராஜ், செயலாளர் பாலமுருகன், உள்பட பொதுமக்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

