விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகள், கலைஞரின் கனவு இல்ல வீடுகள், ஊரக வீடுகள் பராமரிப்பு பணிகள், பிரதமர் மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள்,மரக்கன்றுகள் நடுதல், புதிய குளங்கள் வெட்டுதல் ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்தங்கவேல்,(கிராம).பொறியாளர்செல்வஜோதி,பணி மேற்பார்வையாளர்கள்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

