December 1, 2025
#கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி குழந்தைகள் தின விழா

 by,Suresh Kumar

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி நாடார் உறவின்முறைசங்கத் தலைவர் A.P.K பழனிச்செல்வம் அவர்கள் வழிநடத்துதழின்படி குழந்தைகள் தின விழா 14.11.2024 வியாழக்கிழமை இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நாடார் உறவின் முறைச் சங்க உப தலைவர்எம்.செல்வராஜ்,தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் டி.ஆர். சுரேஷ் குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா எஸ் . எம் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் A. செல்வம் அவர்களின் ஆலோசனையின்படி பள்ளி பொருளாளர் பி.பாஸ்கரன், குழந்தைகள் தின உரையாற்றினார்.பள்ளிக்குழு உறுப்பினர்கள், ஆ.செல்வம்,த. பி. பொன்ராமலிங்கம், I. ரவி மாணிக்கம் மற்றும் நாடார் மேல்நிலைப் பள்ளி உறுப்பினர் திரு S. வேல்முருகன், ஆகியோர் விழாவினை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி வைத்தனர்.

பள்ளி மாணவி கே.சுகவர்ணா அனைவரையும் வரவேற்றார்.குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம் மற்றும் பட்டிமன்றம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இப் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு புத்தகங்களும், சான்றிதழ்களும்,பதக்கங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

ஜவஹர்லால் நேருவின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு 135 மாணவ கண்மணிகள் பண்டிட் ஜவஹர்லால்நேரு முகமூடி அணிந்து விழாவினை சிறப்பித்தனர்

.