கோவில்பட்டி வித்ய பிரகாசம் மனநல குன்றியோர் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கேக் ஊட்டிகொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்ஆசியாபார்ம்ஸ் நிறுவனர் G. பாபு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஐடா முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். மனநல குன்றிய குழந்தைகளால் நடத்தப்பட்ட ஆடல், பாடல், குழந்தைகள் தின நோக்கம் போன்ற கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக ஆசிரியை முத்துமாரி ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆசியாபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பாகவும் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய், பேக், பலூன் போன்றவைகளை திருமதி பத்மா பாபு மற்றும் ஆசியாபார்ம்ஸ் உறுப்பினர்கள் வழங்கி மகிழ்ந்தார்கள். ஆசிரியை ஆனந்த செல்வி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில்
ஆசியாபார்ம்ஸ் மேலாளர் திருமதி மெக்சிடா, மோகனா, கீதா, சதீஷ், வேணி, அர்ஜுன், பத்மா, ஆண்டோ, ராமு, விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

