by, Suresh Kumar
இசை என்பது அனைத்து உயிர்களையும் வசப்படுத்தும் தன்மையுடையது. இசை என்பது மனித வாழ்க்கையோடு ஒன்றியது.இசையால் வசமாகா இதயம் எது..அந்த இசையை காற்றோடு தவழ்ந்து எடுத்துவரும் பண்பலை..
பண்பலையின் பாசப்பறைவகள் நற்பணி மன்றத்தின் சார்பில் இன்று (12.11.2024) நெல்லைப் பண்பலையின் 12-வது உதய நாள் விழா வானொலி நிலைய அலுவலர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில் வானொலியின் பாசப்பறவைகள் தலைவர் வண்ணார்பேட்டை ஜெயராஜ், பொருளாளர் குப்பக்குறிச்சி சுந்தர், செயற்குழு உறுப்பினர் கல்லணை நடராஜன், திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர் கட்டபொம்மன் நகர் ஐயப்பன், மூத்த உறுப்பினர் பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

