ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாலசமுத்திரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி மற்றும் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்ற நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து, பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ, வழங்கினார். மேலும் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்ற உயர்மட்ட மேம்பாலத்தையும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சசிகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, உதவி பொறியாளர் காயத்ரி, பணி மேற்பார்வையாளர் பரமசிவன், வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற துணை தலைவர் துணை தலைவர் வலசை அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

