by CN. அண்ணாதுரை
ஒட்டபிடாரம்:தமிழ்நாட்டின் நீர் நிலைகளை பாதுகாக்கவும் மண் அரிப்பை தடுத்து மழை நீரை சேமிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து 2024 நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமங்களம் ஊராட்சி குப்பனாபுரம் கிராம மக்கள் சார்பில் குப்பனாபுரம் நான்கு கண்மாய்களில் 10,000 பனை விதைகள் நடும்பணி நடைபெற்றது. 
கீழமங்களம் ஊராட்சி மன்றத்தலைவர் அ.ஜெயக்கனி தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய கவுன்சிலர் அரிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் லா.ரமேஷ் கலந்து கொண்டு பனைமரங்களின் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி பத்தாயிரம் பனைவிதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்தார்.
முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
எட்டு நாட்களாக சேகரிக்கப்பட்ட பத்தாயிரம் பனைவிதைகளையும் நான்கு குளத்தின் கரைகளிலும் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.சிவகாமி, நூறு நாள் வேலை திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி பாலிங்க், பணி மேற்பார்வையாளர் முரளி கிருஷ்ணன், ஊராட்சி செயலர் குருசாமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை எம்.வினோத், காசிங்க்ராஜ், குருச்செல்வம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெண்கள் ஆகியோர் செய்து இருந்தனர். பணித்தள பொருப்பாளர் ஜி.புஷ்பா நன்றி கூறினார்
.

