December 1, 2025
#தூத்துக்குடி

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை சண்முகையா எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117 வது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் மாட்டு வண்டி எல்கை போட்டிகள் 03.11.24 அன்று நடைபெற்றன.

மாப்பிள்ளையூரணியில் மாட்டு வண்டி எல்கை போட்டி

இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணகுமார் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான சிறிய வகை மற்றும் பெரிய வகை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இந்நிகழச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பானி முத்து, மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து , விழா கமிட்டியாளர்கள் பொன்னு, சுடலை, ராஜா, ராஜேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பிலோமின்ராஜ், கருத்த பாண்டி, கிளைச் செயலாளர் காமராஜ், ஜீவா பாண்டியன் மற்றும் டேவிஸ் புரம் ரேக்ளா பந்தய குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.