By,CN. அண்ணாதுரை
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள்ளே செல்லும் பிரதான நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்று வரும் புதிய சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாமானிய மக்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்:
ஒரு சிறு மழை பெய்தால் தூத்துக்குடி பிரதான மருத்துமனையான அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நுழைவாயில் வழியாக நேயாளிகளும், மருத்துவர்களும் மற்றும் பணியாளர்களும் செல்லமுடியாத நிலையில் மழைநீர் தேங்கும்.இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்று மருத்துவமனை சார்ந்தவர்களும் வரும் நோயாளிகளுக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர் . மேயர் ஜெகன் பெரியசாமி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு வசதிகளை தூத்துக்குடி நகரில் செய்து கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சுகாதாரத்தின் ஆதாரமாக விளங்கும். அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்னர் சரி செய்யும் பணியை ஆரம்பித்தார் இதனால் இந்த மழையில் சிரமம் இன்றி செல்ல முடியும் என்று மக்கள் கருதினர். இதனால் சாமானிய மக்களின் மனமார்ந்த பாராட்டுக்களையும் பெற்றார்.

தூத்துக்குடியில் கடந்த டிசம்பர்
மாதம் பெய்த பெரும் கனமழையின் போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரதான நுழைவு வாயில் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க புதிய சாலை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த மழைக்காலங்களில் மருத்துவமனையின் நுழைவு வழிகளில் மழைநீர் தேங்கி சிகிச்சைக்கு வருபவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்ட நிலை இருந்தது. தற்போது மேற்கு பகுதி நுழைவு வாசலில் புதிய தார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகள் ஒரு நாட்களில் நிறைவு பெறும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் மக்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக இருக்கும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி செயலாளர் ரவீந்திரன், போல் பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மின்வாரிய யூனியன் தலைவர் பேச்சிமுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

