“தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள்” என போற்றிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் மீரான்பாளையம் தெரு மற்றும் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார்,
ராமலிங்கம், வார்டு செயலர்கள் ஸ்டாலின் கென்னடி, அய்யனர், சுப்புராஜ், சிவசுப்பிரமணியன்,
தாளமாணிக்கம்,லெனின், மாரிராஜ் புதூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் அக்க்ஷய், முன்னாள் வார்டு செயலாளர் குமார், மீரான், சங்கர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், விளாத்திகுளம் நகர மாணவரணி துணை அமைப்பாளர் ராஜு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

