By, CN, அண்ணாதுரை
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளான நவ.27ல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக கொடியேற்றி, பொதுமக்களுக்கு அதிக அளவிலான நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என மாவட்ட பிரதிநிதி கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னிலையில் வடக்கு மாவட்ட அலுவலகம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்;
2026ல் நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கிய கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வரும் நவம்பர் 27ந் தேதி இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் அனைத்து வார்டுகளிலும் கழகக் கொடியேற்றி பொது மக்களுக்கு அதிக அளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும், அன்றையதினம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் மேலும் ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கிட வேண்டும். வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக 29ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதை அனைத்து கிளைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் வழங்கி அதன் பின் வாக்களார் சேர்ப்பு, நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்தல் ஆணையம் முகாம் அமைத்து அறிவித்துள்ளது. அதில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் அதில் நம்கட்சியை சார்ந்தவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். யார் ஒருவர் மொத்தமாக சேர்ப்பு பட்டியல் கொடுத்தாலும் அதை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசின் மீது உங்கள் பகுதியில் தேவையற்ற விமர்சனங்களை பரப்பி வரும் எதிர்கட்சிகள் குறித்த தகவல்களை உடனடியாக எனக்கு தெரிவிக்க வேண்டும் அப்போது தான் அந்த பகுதியில் அதற்கு தகுந்தாற்போல் நாம் பதிலடி கொடுக்க முடியும் எதிர்வரும் தேர்தலில் எல்லோரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றி இரண்டாவது முறையாக கழகத் தலைவரை முதலமைச்சராக்க சபதம் ஏற்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளரும் மாநில நெசவாளர் அணி செயலாளருமான பெருமாள், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய இணைச் செயலாளருமான கணேசன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் பேசினார்கள். பின்னர் முரசொலி செல்வம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வடக்கு மாவட்ட திமுக பெயரில் வங்கி கணக்கு ஆரம்பிப்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ். பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், சி.எஸ்.ராஜா, மாநகர துணைச் செயலாளர்கள் பிரமிளா, கனகராஜ், பொருளாளர் அனந்தையா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரிதங்கம், மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், நவமணி, ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், காசிவிஸ்வநாதன், ராதாகிருஷ்ணன். நவநீத கண்ணன். சின்ன பாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னமாரிமுத்து, ராமசுப்பு. அன்புராஜன், ராதாகிருஷ்ணன். செல்வராஜ். மும்மூர்த்தி, பேரூர் செயலாளர்கள் கிருஷ்ணகுமார். சுரேஷ் கண்ணன், பாலகுமார், வேலுச்சாமி, மருதுபாண்டியன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், சார்பு அணி அமைப்பாளர்கள் ஐடி விங் அபிராமி நாதன், மகளிரணி கவிதா தேவி, மாணவரணி சீனிவாசன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மருத்துவரணி தலைவர் அருண்குமார், சுற்றுச்சூழல் அணி பார்த்தசாரதி, வழக்கறிஞர் அணி ரூபராஜா, ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, இளைஞரணி பகுதி செயலாளர் சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

