December 1, 2025
#ஒட்டப்பிடாரம்

அயிரவன்பட்டியில் நீர்த்தேக்கத் தொட்டியை திறந்துவைத்து; ஒட்டநத்தம் குளத்தை ஆய்வு செய்த சண்முகையா எம்.எல்.ஏ

By,சி.என்.அண்ணாதுரை
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயிரவன்பட்டியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியை சண்முகையா எம்.எல்.ஏ, திறந்து வைத்தார்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய்3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட10000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தள நீர்த்தேக்கத் தொட்டியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் முன்னிலையில் திறந்து வைத்தார்.
வேளாண்மை துணை மையம் ஆய்வு:
தொடர்ந்து ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டநத்தம் வேளாண்மை துணை விரிவாக்க மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

அதன் தொடர்ச்சியாக ஒட்டநத்தம் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் குளம் நிரம்பிய நிலையில் கரைகள் மற்றும் மதகுகளின் தன்மையை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள்சாவித்திரி,அருண்குமார், ஊராட்சி செயலர்ராஜு,அரசு ஒப்பந்ததாரர்கள் முஹம்மத்,ஜோசப்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் சரவணகுமார், இளைஞரணி யினர் மணிகண்டன், மகேஷ், கிளை செயலாளர்கள் இளையராஜா,இளங்கோ மற்றும் அலெக்ஸ், அயிரவன்பட்டி பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.