December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி விசிக சார்பில் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது

  Byசி.என். அண்ணாதுரை

தூத்துக்குடி,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மிக மூத்த நிர்வாகியும், கட்சியின் முதன்மை செயலாளராகவும் இருந்த உஞ்சை அரசன் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியானது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, உத்தரவிற்க்கிணங்க தமிழகமெங்கும் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நினைவேந்தல் மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன் தலைமை தாங்கினார், மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார், வழக்கறிஞர் அர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்க அஞ்சலிசெலுத்தப்பட்டது.

தொடர்ந்து மறைந்த முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் தனது ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழுநேர கட்சிப் பணியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், இறுதியாக முதன்மைச் செயலாளராக உயர்ந்ததை விசிக நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊடகப்பிரிவு அமைப்பாளர் முத்துக்குமார், 49வது வட்ட செயலாளர் இசக்கி முத்து, 58வது வட்ட செயலாளர் சேசுராஜ், 49வது வார்டு பொறுப்பாளர் தோழர் ஆறுமுகம், 58வது வார்டு துணை செயலாளர் சந்தனராஜ் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

.