December 1, 2025
#விளாத்திகுளம்

முதியோர்களின் நலன் பாதுகாப்பை உறுதி செய்து, உற்ற துணையாக தமிழக அரசு செயல்படுகிறது -அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்.

By,CN. அண்ணாதுரை 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் முன்னிலையில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்:

ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் நாள் சர்வதேச முதிர்யோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தின விழா கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச முதியோர் தின விழாவில் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாடல் பாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய பெரியவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளுக்கு குடும்ப பொறுப்பு மற்றும், சமூக பொறுப்பையும் சொல்லி வளர்க்க வேண்டும்.
முதியோர்களை பாதுகாத்து அரவணைத்துச் செல்ல வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை உணர்த்த வேண்டும்.

சிறுவயதில் இருந்து நம்மையெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்களை பாதுகாத்து, பராமரித்து உறுதுணையாக இருக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை வலியுறுத்தும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சமுதாயத்தில் முதியோரை காக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். முதியோர்களின் அனுபவத்தை, இளைஞர்கள் ஒவ்வொருவரும் பின்பற்றி தங்களது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள
வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு உரிமைச் சட்ட விதியை உருவாக்கிய அரசு முத்தமிழறிஞர் கலைஞரின் அரசு. மேலும் தமிழகத்தில் பிரசித்திபெற்ற திருத்தலங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக முதியோர்களை பராமரிப்பதற்கு ஏதுவாக புதிய தொண்டு நிறுவனங்கள் தொடங்குவதற்கு அரசு நிதியுதவி அளித்து ஊக்குவித்து வருகிறது. முதியோர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 உதவித் தொகையை 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கிய அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. இவ்வாறு முதியோர்களின் நலன் காத்திடவும் , அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், அவர்களுக்கு உறுதுணையாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மூத்த குடிமக்களுக்கு அமைச்சர் பி.கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் ஜிவி.மார்கண்டேயன், ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் பரிசு பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல உரிமைச் சங்க மாநில துணைத் தலைவர் மாசிலாமணி, முதியோர் இல்ல மேலாளர் சேகர், புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் வனிதா. விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி. விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், நாகலாபுரம் ஊராட்சி தலைவர் உலகம்மாள் முனியசாமி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் தர்மலிங்கம், ஆவுடையப்பன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள்,