December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில் நடைபெற்றது

  By,CN. அண்ணாதுரை

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், வட்டாட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.

24 கிராமங்களைச் சேர்ந்த 900 மக்கள்:

இம்முகாமில் தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட 24 கிராமங்களைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வேண்டுமென பதிவு செய்தனர்.

இன்று நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாமில் பதிவு செய்த 300 பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை பதிவேற்றம் செய்யப்பட்டது. முகாமில் பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் காப்பீடு அட்டைகளை வழங்கினார். மருத்துவ காப்பீடு அட்டைகளை பெற்றுக் கொண்ட மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த முகாம் அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் பொதுமக்கள் முகாமில் பதிவு செய்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை பெற்று பயனடையுமாறு அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல் ராஜ், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், கந்தசாமி, மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ஷ்டமணி, வைதேகி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணா தேவி, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி ஒருங்கிணைப்பாளர் மார்க்கின் ராபர்ட், பகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் ஜோயல், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல், பகுதி துணைச் செயலாளர் ரேவதி, மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.