By,CN.அண்ணாதுரை
தூத்துக்குடி மாநகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்குமண்டலத்தில் 16.10.24 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்றார்.
முகாமில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.
முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி;தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டு வருகிறோம்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறநகர் பகுதியில் உள்ள சங்கரப்பேரி, முள்ளக்காடு மற்றும் பக்கிள் ஓடை உள்ளிட்ட 11 வழித்தடங்களின் வழியாக மழைநீர் கடலில் கலக்கிறது இந்த இடங்களை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் மாநகர குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால்களும் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. மழை நீர் வடிகால்களில் தடையின்றி நீர் சென்று முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் பகுதிகளில் தூர் வாரும் பணிகளை விரைவு படுத்தியுள்ளோம். கிழக்கு மண்டலத்தை பொறுத்தவரை வடிகால் மற்றும் சாலை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.
மாமன்ற உறுப்பினர்களிடமும் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்காணித்து தகவல் தருமாறு கேட்டுள்ளேன். நமது மாநகராட்சியை பொருத்தவரை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளதாகவும் பருவ மழையை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் வெங்கட் ராமன், நகர் நல அலுவலர் வினோத் ராஜா, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸிலின், பேபி ஏஞ்சலின், மரிய கீதா, சரண்யா, ஜான்சிராணி, எடிண்டா, மும்தாஜ், ராமுஅம்மாள், தனலெட்சுமி, மகேஷ்வரி, சுகாதார அலுவலர் ராஜசேகர், மேயர் உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்உடனிருந்தனர்.

