by,CN. அண்ணாதுரை
தூத்துக்குடி,வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்
முக.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் தொடர் களஆய்வை மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில பகுதிகளான குலையன்கரிசல் பெட்டை குளத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் 15.10.24 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில பகுதிகளான குலையன்கரிசல் கிராம் பெட்டை குளத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கடந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட குளத்தின் பகுதிகளையும் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை குறித்தும் மேலும் குளத்தின் கரைகள் தன்மை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் குலையன்கரிசல் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார்.
பின்னர் பாண்டியாபுரம் அருகே மதிகெட்டான் ஓடை, முள்ளக்காடு விலக்கு மற்றும் ஜே.ஜே. நகர் சந்திப்பு பகுதி மற்றும் கோவங்காடு விலக்கு பகுதிகளிலும், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் பாலத்தின் கீழ் புறம் ஓடையில் உள்ள மண் திட்டுக்களை பார்வையிட்டார். தொடர்ந்து
கோரம்பள்ளம் குளம் 24 மதகுகள் மற்றும் குளத்தின் நீர் இருப்பு குறித்தும் பார்வையிட்டார். தொடர்ந்து அத்திமரப்பட்டி கோரம்பள்ளம் சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினையும்,
காலாங்கரை அருகே கோரம்பள்ளம் குளத்தில் கடந்த ஆண்டு மழையினால் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியையும், தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு ரஹ்மத் நகரில் வாறுகால் அமைக்கும் பணிகளையும் சண்முகையா எம்.எல்.ஏ, பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, தொழிலாளர் அணி மொபட்ராஜன், வழக்கறிஞர் அணி மகேந்திரன்,
கிளைச் செயலாளர் மங்களராஜ்,
விவசாய சங்க பிரதிதிகள் ரமேஷ்,
தனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

