By I.ASHOKKUMAR
கடற்கரை அலைகள் நம்மை இதமாக தொடும் போது..மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்ச்சியான. நினைவலைகள் மெல்லியதாக தொட்டு செல்லும்.
அதேபோல் முத்து நகர் கடற்கரை பூங்கா மென்மையான மணல் மற்றும் மென்மையான அலைகள் தொட்டுத் தழுவும் கடற்கரையை நிதானமாக உலாவுவதற்கு ஏற்றதாகும்.
அதை மேலும் தூய்மை படுத்தி மெறுகேற்றும் வகையில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி தூத்துக்குடி மாநகர கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும் விதமாக பீச் ரோடு, அமைந்துள்ளது முத்து நகர் கடற்கரை பூங்கா 13.10.2024 இன்று காலை, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Environmentalist foundation of India) இணைந்து சுத்தம் செய்யும் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
/
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடன் இணைந்து முத்து நகர் கடற்கரை பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றினார்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல் ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ் குமார், திமுக மீனவரணி மாநில துணை செயலாளர் புளோரன்ஸ், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், ஏசுவடியான், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேணி, துணை அமைப்பாளர் ஜேசையா, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பெல்லா, மாமன்ற உறுப்பினர்கள் எடிங்ண்டா, பவானி, ரெக்ஸிலின், சரவணகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, வைதேகி, சுப்புலட்சுமி, வட்ட செயலாளர்கள் டென்சிங், கதிரேசன், பாலு, சுரேஷ்குமார், பிரதிநிதிகள் பாஸ்கர், மார்ஷல், மகளிரணி ரேவதி, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து குப்பைகளை அகற்றினார்.

