ஓட்டப்பிடாரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு தொண்டர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் *கடம்பூர் ராஜூ* எம்எல்ஏ மற்றும் அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் *வி.எம்.ராஜலட்சுமி* ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, ஒன்றிய செயலாளர் சண்முகவேல், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வீரபாண்டி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பிஜி ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஜாக்சன் துரைமணி,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

